அறிமுகம்

banukumar

மன்னார்குடியில் பிறந்தேன். சாதாரண- மிடில் க்ளாஸ் குடும்பத்துல, பக்தி மார்க்கத்தில் இருக்குற ஒரு சின்ன சமூகத்துல வளர்ந்தேன். ஏழாவது படிக்கும் போதிலிருந்தே வாசிச்சுட்டு இருக்கேன். வாசிப்புத்தான் படைப்பாளியாக மாறுகிறது.

பள்ளிப் படிப்பை மன்னார்குடி பின்லே உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப் படிப்பை - புஸ்பம் கல்லூரி பூண்டியிலும், பட்டமேற்படிப்பை திருச்சி தேசியக் கல்லூரியிலும் பயின்றேன். ஓராண்டு காலம் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை. நாட்டின் நெருக்கடிகால கட்டத்தில்- முதல் அரசுப் பணி. சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்று ஆண்டுகளும் கூட்டுறவுத் துறையிலே 30 ஆண்டுகளும் அதிகாரியாப் பணியாற்றி ஒய்வு பெற்றேன்.

மனைவி, மகன், மகள், பேரப்பிள்ளைகள் என்று கலகலப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை. என்ன குழந்தைகள் இருவரும் பிழைப்பு தேடி அயல் நாட்டில் வசித்து வருகின்றனர். அவ்வபோது விமானப் பயணங்கள். அரசுப் பணியிலிருந்த போதே- எனது எழுத்துப் பயணம் தொடங்கியது.

எறும்புகள் வெல்லக்கட்டியை இழுத்துக் கொண்டு வந்ததைப் போல் சமுதாயத்தை எனது இருப்பிடத்திற்க்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் என் எழுத்துக்கள். ஆன்மீகம், வரலாறு, தன்னம்பிக்கை, சுற்றுலா, ஒப்பாய்வு, ஆராய்ச்சி நூல்கள் என 52 நூல்கள் இதுவரை வெளி வந்திருக்கின்றன. எழுதாத நேரங்களில் எண்ணங்களைப் பேச்சாக்கி யூடியுபில் vethathiriyam banukumar என்ற தலைப்பில் இதுவரை 94 உரைகளை பதிவு செய்திருக்கிறேன். மரணிக்கும் வரை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று பிராத்திக் கொண்டிருக்கிறேன். நிறைய தடைகளை கடந்து வந்தாலும், இறையாற்றலின் கருணையினால் எனக்கு வெளிய இருந்த ஆதரவினால் நிறைய செய்ய முடிஞ்சிருக்கு.